

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலையோரங்கள், பொது இடங்கள், சந்தை பகுதிகள், பேரூந்து நிலைய வளாகம் உட்பட நகர பகுதிகளில் பிளிச்சிங் பவுடர்களை தூவியும், கிருமி நாசினிகளை தெளித்தும் நோய்தொற்று குறித்த அச்சமின்றி தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் மூலம் நாகர்கோவில் மாநககராட்சி எரிவாயு மயானத்தில் கரோனாவினால் இறந்தவர்களை தகனம் செய்வதற்கும் தூய்மை பணியாளர்கள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதைப்போல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொசு ஒழிப்பு பணியாளர்களும் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா நோய் தொற்று காலத்தில் துரிதப்பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர், மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து உணவுகளை வழங்க நாகர்கோவவில் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாநராட்சி பகுதிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் 300 பேருக்கு இலவசமாக தலா 30 முட்டைகள் வீதம் மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்டது.