குமரியில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்ற இருவர் குணமடைந்தனர்: இதுவரை 974 பேருக்கு பரிசோதனை

குமரியில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்ற இருவர் குணமடைந்தனர்: இதுவரை 974 பேருக்கு பரிசோதனை
Updated on
1 min read

குமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 16 பேர்களில் இருவர் குணமடைந்துள்ளனர். இதுவரை 974 பேருக்கு கரோனா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை, காவல்துறை, மற்றும் உள்ளாட்சி துறையினர் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தியுள்ளனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொற்றுநோய் சிகிச்சைக்கான கரோனா வார்டில் இதுவரை 974 பேர் அனுமதிக்கப்பட்டு நோய்தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டது.

இவர்களில் இதுவரை 16 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மீதமுள்ளவர்களுக்கு கரோனா தொற்று இல்லை.

மாவட்டம் முழுவதும் இதுவரை 262 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறியதாக இதுவரை 5265 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4185 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்று ஏற்பட்டு 16 பேரில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த நாகர்கோவில் வெள்ளடிச்சிவிளையை சேர்ந்தவரை இரு கட்டங்களாக பரிசோதனை செய்தபோது கரோனா தாக்கம் குறைந்து குணமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே தற்போது கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தேங்காய்பட்டணத்தை சேர்ந்த ஒருவரும் கரோனாவில் இருந்து குணமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் அடுத்தகட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கரோனா இல்லை என்பது உறுதியான பின்னர் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in