தமிழக சுகாதாரத் துறை இணையதளத்தில் ‘தி இந்து’ கரோனா விழிப்புணர்வு கையேடு பதிவேற்றம்
‘தி இந்து’ குழுமம் தமிழில் வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கையேடு தமிழக சுகாதாரத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
‘தி இந்து’ ஆங்கிலம், ‘இந்து தமிழ்’ நாளிதழ்கள் இணைந்து வெளியிட்டுள்ள அந்த கையேட்டில், நோய் எப்படி பரவுகிறது, யார் பாதிக்கப்படுகிறார்கள், தற்காத்துக் கொள்வது எப்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், கரோனா குறித்த பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுக்கான விடைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கையேடு, கரோனா தடுப்புக்கென தமிழக சுகாதாரத் துறை உருவாக்கியுள்ள https://stopcorona.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கையேட்டை பதிவிறக்கம் செய்ய விரும்புவோர், இணையதளத்தில் Important information என்பதை முதலில் கிளிக் செய்ய வேண்டும். அதில் வரும் Tamilnadu, India, ICMR, Others என்ற நான்கு ஆப்ஷன்களில் Others என்பதை கிளிக் செய்தால், இரண்டாவதாக ‘The Hindu corona e-book’ என்ற பெயரில் கையேடு இடம்பெற்றிருக்கும். அதை கிளிக் செய்து தமிழ் கையேட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
