ஒரே நாளில் 48 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு: கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் கரூரில் அதிகம்

ஒரே நாளில் 48 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு: கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் கரூரில் அதிகம்
Updated on
1 min read

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 53 பேர் நேற்று முன்தினம் வரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இங்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் என நேற்று ஒரே நாளில் 48 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடை பெற்றது. குணமடைந்து வீடு திரும்புபவர்களுக்கு பழங்கள் வழங்கப்பட்டு ஆம்புலன்ஸ் மற்றும் சிறப்பு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களை கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர்கள் சி.முனிய நாதன், ஏடிஜிபி அபய்குமார் சிங், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், எஸ்.பி ரா.பாண்டியராஜன், கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா மற்றும் மருத்துவர்கள், செவி லியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.

அதிகமானோர் டிஸ்சார்ஜ்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலி ருந்து, கரோனாவால் பாதிக் கப்பட்டு குணமடைந்த 101 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். அதன்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டு குண மடைந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகத்திலேயே கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதலி டம் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 75 பேரும், சென்னை ஓமாந்தூரார் மருத்துமனையிலிருந்து 51 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in