Published : 21 Apr 2020 07:34 AM
Last Updated : 21 Apr 2020 07:34 AM

ஈரானில் சிக்கித் தவிக்கும் 650 தமிழக மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்

ஈரானில் தவித்துவரும் தமிழக மீனவர்கள் 650 பேருக்கு உணவு,குடிநீர் வசதிகளை அளித்து அவர்கள் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஈரான் நாட்டின் கிஷ், லவன், பந்தர்இமோகம், சலுயா மற்றும் பல்வேறுபகுதிகளில் சிக்கியுள்ள தமிழகத்தின்650 மீனவர்கள் உட்பட இந்தியாவின் 1000 மீனவர்களுக்கு உணவு,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதைவலியுறுத்தி இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த மீனவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி அவர்கள் பாதுகாப்பாக நாடுதிரும்ப ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களுக்கு ஏற்கெனவே கடந்த பிப்.28-ம் தேதி கடிதம் எழுதியிருந்தேன்.

அந்நிய மண்ணில் போதிய உணவுஉள்ளிட்ட அடிப்படை தேவைகள்இன்றி அவதிப்படும் மீனவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே, ஈரானில் உள்ள மீனவர்களுக்கு உடனடியாக உணவு தண்ணீர்உள்ளிட்ட வசதிகளை அளித்து, அவர்கள் விரைவில் இந்தியா திரும்பநடவடிக்கை எடுக்க ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தங்கள் துறை மூலம் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x