ஆண்டிபட்டியில் உணவின்றி தவிக்கும் குரங்குகள்: விலை போகாத விளைபொருட்களை உணவாக கொட்டிச் செல்லும் விவசாயிகள்

ஆண்டிபட்டியில் உணவின்றி தவிக்கும் குரங்குகள்: விலை போகாத விளைபொருட்களை உணவாக கொட்டிச் செல்லும் விவசாயிகள்
Updated on
1 min read

மதுரை - தேனி மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் அமைந்துள்ள தர்மசாஸ்தா கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான குரங்குகள் காணப்படுகிறது.

வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தி சமையல் செய்து சாப்பிடும் போது, அந்த உணவை குரங்குகளும் சாப்பிட்டு வந்தது.

மேலும் மதுரை, தேனி சாலையில் வாகனங்களில் செல்வோர் குரங்களுக்கு உணவு பொருட்களை வழங்கி சென்றனர்.

இதன்காரணமாக குரங்கள் இயற்கையாக மலைகளில் உள்ள மரங்களில் இருந்து பழங்களை பறித்து சாப்பிடும் பழக்கத்தை மறந்துவிட்டு, உணவுக்காக மனிதர்களை நாடும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தர்மசாஸ்தா கோவில் மூடப்பட்டதாலும், சாலையில் வாகனங்கள் இயக்கப்படாத காரணத்தாலும் குரங்குகள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் வசிக்கும் குரங்களுக்கு வனத்துறை சார்பில் பழங்கள் தினமும் வழங்கப்படுகிறது-.

மேலும் விவசாயிகள் விலை போகாத விளை பொருட்களை அந்தப் பகுதியில் வந்து கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள குரங்குகள் பசியாறி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in