வீடுவீடாகச் சென்று கபரசுகுடிநீர் வழங்கும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய தலைவர்

கபசுரகுடிநீர் கேனுடன் கிராமமக்களை சந்திக்க இருசக்கரவாகனத்தில் செல்லும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி முருகன்.
கபசுரகுடிநீர் கேனுடன் கிராமமக்களை சந்திக்க இருசக்கரவாகனத்தில் செல்லும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி முருகன்.
Updated on
1 min read

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு இருசக்கரவாகனத்தில் கபசுரகுடிநீர்கேனுடன் செல்லும் ஊராட்சி ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி முருகன் வீடுவீடாகச் சென்று மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கிவருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளில் பொதுமக்களுக்கு திமுக சார்பில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.

இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய தலைவரான திமுகவை சேர்ந்த பரமேஸ்வரிமுருகன், ஒன்றிய கவுன்சிலர் ஷர்மிளாஷாஜகானுடன் இருசக்கர வாகனத்தில் கபசுரகுடிநீர் கேனுடன் பயணித்து வீடுவீடாகச் சென்று கபசுரகுடிநீர் வழங்கிவருகிறார்.

ஒரே இடத்தில் வைத்து வழங்கினால் சமூக இடைவெளி பின்பற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் ஒன்றிய தலைவரே வீடுவீடாகச்சென்று கபரசுகுடிநீர் வழங்கிவருகிறார்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்வகையில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிக்குடிக்கின்றனர்.

நேற்று கன்னிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கபசுரகுடிநீரை பரமேஸ்வரிமுருகன் வழங்கினார். ஊராட்சித்தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

வத்தலகுண்டு ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமமக்களுக்கும் கபரசுகுடிநீர் வழங்கிவருகிறோம் என பரமேஸ்வரிமுருகன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in