

தமிழகத்தில் இன்று உள் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மாநிலத்தில் நேற்று முன் தினம் வெப்பச் சலனம் காரணமாக பல இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 15 செ.மீ. பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலகோட்டில் 11 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, திருச்சி மாவட்டம் துவாக்குடி ஆகிய இடங்களில் 10 செ.மீ., தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் தஞ்சாவூரில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது.
வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரி வித்ததாவது:
தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி காற்று வீசும். வெப்பம், ஈரப்பதம், உறுதியற்ற வானிலை நிலவும்போது வெப் பச் சலனம் காரணமாக மழை பெய்யும்.
தமிழகத்தில் இன்று கட லோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் பல இடங்களிலும் மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.