Published : 20 Apr 2020 07:52 AM
Last Updated : 20 Apr 2020 07:52 AM

வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் போலீஸாரால் அவதியுறும் விவசாயிகளின் குறை தீர்க்க டிஎஸ்பி-க்கள் நியமனம்

திருச்சி சரக டி.ஐ.ஜி வே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த விளைபொருட்களை சரக்கு வாகனங்களில் ஏற்றிச் செல் வதற்கும், விற்பனை செய்வதற்கும் எந்த ஒரு தடையும் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

ஆனாலும், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்காக 2, 4 சக்கர வாகனங்களில் செல்வோரை சில இடங்களில் காவல் துறையினர் நிறுத்தி சோதனை செய்வதால், தாங்கள் அவதிக்குள்ளாவதாக விவசாயிகளிடமிருந்து புகார்கள் வரப்பெற்றன.

இதையடுத்து திருச்சி சரகத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களிலும் விவசாயம் தொடர்புடைய குறைகளைத் தீர்ப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் டிஎஸ்பி நிலை யிலான ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி திருச்சி மாவட் டத்துக்கு சிவசுப்பிரமணியன் 94981-58901, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு குணசேகரன் 94981-50081, கரூர் மாவட்டத்துக்கு சுப்பிரமணியன் 94981-04410, பெரம்பலூர் மாவட்டத்துக்கு ரவிச்சந்திரன் 94981-53276, அரியலூர் மாவட்டத்துக்கு கண்ணன் 94981-67666 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்புக்குள்ளாகும் விவசா யிகள் இவர்களையோ அல்லது கரோனா சிறப்பு காவல் கட்டுப் பாட்டு அறை எண்ணுக்கோ 0431-2333638 (திருச்சி), 04322- 266966 (புதுக்கோட்டை), 04324-255100 (கரூர்), 04328-224962 (பெரம்பலூர்), 04329-222216 (அரியலூர்) தொடர்புகொண்டு தங்களின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x