

காவல் துணை ஆணையர் பாடிய கரோனா விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதைதடுக்க ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை போலீஸார்தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தடைஉத்தரவை மீறுபவர்களுக்கு பல்வேறு வகையான தண்டனைகளையும் வழங்குகின்றனர். இது ஒருபுறம் இருக்க ரோந்து வாகனங்களில் சென்று போலீஸார் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்கின்றனர்.
மேலும் திரைப்பட நடிகர்களை வைத்து விழிப்புணர்வு பாடல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரியான சென்னை காவல் துணை ஆணையர் ஆர். திருநாவுக்கரசு (நுண்ணறிவு பிரிவு) கரோனா விழிப்புணர்வு பாடலை எழுதி, அதைப் பாடி வெளியிட்டுள்ளார். ‘விழித்திரு,விலகியிரு, வீட்டிலிரு’ என்பதை மையமாக வைத்தும், கரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்தும் பாடலாக பாடி வெளியிட்டுள்ளார். இதற்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.