

மத்திய அரசின் வழிகாட்டுதல் தொடர்பாக தமிழக அரசின் குழு ஆலோசனை நடத்தி வருகிறது, இந்தக் குழு தமிழக அரசிடம் மேற்கொள்ளும் பரிந்துரைகள் அடிப்படையில் அறிவிப்பு வெளி வரும் வரை ஊரடங்கு, லாக் டவுன் தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
20ம் தேதி எந்தெந்த தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள், மற்ற சேவைகள் இயங்கலாம் என்பது குறித்து மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 15ம் தேதி கேட்டுக் கொண்டது.
அதனடிப்படையில் தமிழக அரசு ஒரு வல்லுனர் குழுவை அமைத்தனர். நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் அந்தக் குழு அமைக்கப்பட்டு அவர்கள் உறுப்பினர்களிடையே ஆலோசனை மேற்கொண்டார்கள்.
இந்த ஆலோசனயின் முடிவுகள் நாளை தமிழக முதல்வரிடம் அளிக்கப்படவுள்ளது. அதன் பிறகுதான் தமிழக முதல்வர் எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்க்ள், இதர சேவைகளை தமிழகத்தில் தொடரலாம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார். அதுவரை ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என்பதுதான் தற்போதைய நிலவரமாகும்.
வல்லுனர் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தமிழக முதல்வர் அறிவிப்பாக வெளியிடுவார். அதுவரை காத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் இப்போதைக்கு எந்தத் தளர்வும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார், இதே போன்று ஒவ்வொரு மாவட்ட நிலவரமும் ஆராயப்பட்டு வல்லுநர் குழுவின் அறிக்கை நாளைதான் அளிக்கப்படவுள்ளது. முதல்வர் இதனடிப்படையில் அறிவிப்பு வெளியிடுவார்.