பிஎஸ்என்எல் தமிழக வட்டத்தின் தலைமை பொது மேலாளர் பூங்குழலி பொறுப்பேற்பு

பிஎஸ்என்எல் தமிழக வட்டத்தின் தலைமை பொது மேலாளர் பூங்குழலி பொறுப்பேற்பு
Updated on
1 min read

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தமிழக வட்ட தலைமை பொது மேலாளராக என்.பூங்குழலி பொறுப்பேற்றார்.

இதுதொடர்பாக மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பிஎஸ்என்எல் தமிழக வட்டத்தின் முதல் பெண் தலைமை பொது மேலாளராக என்.பூங்குழலி பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய தொலைத்தொடர்பு அதிகாரியாக 1979-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். சென்னை ஐஐடி-யில் மின்னணுவியல் பட்டப் படிப்பை நிறைவு செய்த அவர், எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். கொரியா, மலேசியா போன்ற நாடுகளில் பயிற்சி பெற்றுள்ளார். தொலைத்தொடர்பு துறையிலும், பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பல்வேறு பொறுப்புகளில் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in