கரோனாவால் ஏற்பட்ட சமுதாய நன்மைகள்: தற்கொலை, விபத்து, திருட்டுகள் குறைந்தன- புள்ளி விவரத்துடன் போலீஸார் தகவல்

கரோனாவால் ஏற்பட்ட சமுதாய நன்மைகள்: தற்கொலை, விபத்து, திருட்டுகள் குறைந்தன- புள்ளி விவரத்துடன் போலீஸார் தகவல்
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங் கால் மக்களுக்கு வாழ்வாதார பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் விபத்துகள், தற்கொலைகள், திருட்டுகள் போன்றவை பெருமளவு குறைந்து இருப்பதாக போலீ ஸார் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தங்களது குடும்பத்துடன் வீட்டிலேயே பொழுதைக் கழித்து வருகின்றனர். சாலைகளில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் 99 சதவீத விபத் துகள் குறைந்து விட்டன.

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரியில் 5 ஆயிரத்து 100 விபத்துகளும், பிப்ரவரியில் சுமார் 5 ஆயிரம் விபத்துகளும் நடந்துள்ளன. ஊரடங்கு தொடங் கப்பட்ட மார்ச் 25-ம் தேதி முதல் கடந்த 15 தேதி வரை 22 நாட்களில் மொத்தம் 103 விபத்துகளே நடந்துள்ளன. ஜனவரியில் 910 பேரும், பிப்ர வரியில் 800 பேரும் விபத்தில் இறந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

மேலும், திருட்டு, கொள்ளை தொடர்பாக ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் 2 ஆயிரத்து 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஊரடங்கு காலத்தில் 17 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் 88 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஊரடங்கு காலத்தில் 6 பேர் மட்டுமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 2 பேர் கரோனா நோய் மீதான பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆம்புலன்ஸ் தேவை குறைவு

வாகனப் போக்குவரத்து இல்லாத நிலையில் விபத்துகள் குறைந்ததால் 108 ஆம்புலன்ஸ் தேவையும் குறைந்துவிட்டது. குற்றங்கள் குறைவதற்கு டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்ட தையும் ஒரு காரணமாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மது போதை குற்றங்கள் 98 சதவீதம் குறைந்து விட்டன.

சென்னையில் 79 சதவீத குற்றங்கள் குறைந்துள்ளன. கொலைசம்பவங்கள் 44 சதவீதமும், கொள்ளை நிகழ்வுகள் 75 சதவீதமும், மொத்த திருட்டு சம்பவங்கள் 81 சதவீதமும் குறைந்துள்ளன. சாலைப் போக்குவரத்து இறப்பு நிகழ்வுகள் 75 சதவீதமும், காயம் ஏற்படுவது 81 சதவீதமும் குறைந்துள்ளன.

இவ்வாறு போலீஸார் தெரி வித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in