தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உதவி செய்ய இயந்திரம் தயாரித்த கல்லூரி மாணவர்

பொறியியல் மாணவர் மதன்குமார் தயாரித்துள்ள இயந்திரம்.
பொறியியல் மாணவர் மதன்குமார் தயாரித்துள்ள இயந்திரம்.
Updated on
1 min read

கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் மதன்குமார். இவர், கோவை கிருஷ்ணா தொழில்நுட்பப் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வருகிறார்.

தற்போது வீடுகளில் தனிமைப் படுத்தி கண்காணிக்கப்படும் நபர் களுக்கு, அவர்கள் இருக்கும் அறைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்காக இயந்திரம் ஒன்றை தயாரித்து ள்ளார்.

இதுகுறித்து அவர் கூறி யதாவது: இந்த இயந்திரத்தை நமது செல்போனில் உள்ள BLYNK APP உதவியுடன் இயக்க முடியும்.

இந்த இயந்திரம் மூலம் 3 முதல் 4 கிலோ எடை உள்ள பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். தயாரிப்பு செலவு ரூ.1,500 மட்டுமே. அரசு உதவி செய்தால் இந்த இயந்திரத்தை சமதளம் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் இயங் கும் வகையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி மேம்படுத்த முடியும் என்றார். சு.கோமதிவிநாயகம்


அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in