பெருந்துறை அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பில் இருந்து 9 பேர் குணமடைந்தனர்- ஈரோடு மாவட்ட ஆட்சியர் தகவல்

பெருந்துறை அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பில் இருந்து 9 பேர் குணமடைந்தனர்- ஈரோடு மாவட்ட ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

பெருந்துறை அரசு மருத்துவமனை யில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தாய்லாந்து நாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 9 பேர் குண மடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு ஆட்சி யர் சி.கதிரவன் கூறியதாவது: பெருந்துறை அரசு மருத்துவ மனையில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 70 பேர்க ளில், நேற்று முன்தினம் 13 பேரும், இன்று (நேற்று) 9 பேரும் முழு மையாக குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று குணமடைந்த 9 பேரில் ஈரோட்டைச் சேர்ந்த 7 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.

குணமடைந்த தாய்லாந்து நாட்டி னர் இருவர் மீதும் வழக்கு உள்ள தால், அவர்கள் மருத்துவமனை யிலேயே காவலில் வைக்கப் பட்டுள்ளனர். ஏற்கெனவே தாய் லாந்து நாட்டினர் 4 பேர் முழுமையாக குணமடைந்துள்ள னர். இதன்மூலம் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 6 பேரும் கரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை 23-ம் தேதி வரவுள்ள நிலையில், அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

கடந்த இரு நாட்களில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களிடம் இருந்து 270 ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. அதில் கரோனா தொற்று யாருக்கும் இதுவரை வரவில்லை. கடந்த ஒரு வார மாகவே பெருந்துறை அரசு மருத்துவமனையில் கரோனா ரத்த மாதிரி பரிசோதனைகள் நடந்து வருகிறது. நமது மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் ‘ராபிட் கிட்’ எண் ணிக்கைக்கு ஏற்ப, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத் தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இக்கருவிகள் மூலம் வீடுகளில் சோதனை மேற்கொள் ளப்படும், என்றார்.

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு, ஆட்சி யர் சி.கதிரவன், எஸ்பி எஸ்.சக்தி கணேசன் ஆகியோர் பழக்கூடை களை வழங்கி வாழ்த்து தெரிவித்து வீடுகளுக்கு வழியனுப்பி வைத் தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in