முந்தைய கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம்- மின்துறை அமைச்சர் தகவல்

முந்தைய கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம்- மின்துறை அமைச்சர் தகவல்
Updated on
1 min read

கடைகளுக்கான மின்சாரக் கட்டணத்தை முந்தைய கணக்கீட்டின்படி செலுத்தலாம் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடி ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளை சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.600 மதிப்புள்ள உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது:

கடை உரிமையாளர்கள், மின் கட்டணத்தை முந்தைய கணக்கீட்டுப் படி கட்டலாம். மின் கட்டணம் செலுத்த முடியாத கடை உரிமையாளர்கள், மே 3-ம் தேதி தடை உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் , மின் பணியாளர்கள் கணக்கெடுத்த பின்னர் செலுத்தலாம்.

ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளில் கடை வைத்திருப்பவர்க ளுக்கு வாடகை ரத்து அல்லது கட்ட அவகாசம் வழங்கப்படுவது குறித்து தமிழக முதல்வரும் உள்ளாட்சித் துறை அமைச்சரும் தான் முடிவு செய்ய முடியும்.

ரிக் தொழிலாளர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ரிக் வண்டிகளுக்கான கடன் தவணைத் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு, வட்டி தள்ளுபடி குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in