

விருதுநகர் மாவட்டத்தில் வரும் 20-ம் தேதி முதல் 50 சதவீத தொழிலாளர்களுடன் பட்டாசு ஆலைகள் இயங்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து கைத்தறி மற்றும் துணிநூல்துறை இயக்குநர் கருணாகரன், தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நேற்று நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாளை (இன்று) முதல் தீப்பெட்டி தயாரிப்புக் கான மூலப்பொருள்கள் கேரளாவிலிந்து விருதுநகர் மாவட்டத்துக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
சிவகாசியில் புத்தகம், டைரி, நோட்டு புத்தகம் தயாரிப்பு நிறுவனங்கள் வரும் 20-ம் தேதி முதல் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கலாம். அதேபோல் சிவகாசி ஊரகப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கலாம். மருத்துவ பேண்டேஜ் தயாரிப்பு ஆலை கள் 100 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் 3,295 பேர் வீட்டு கண் காணிப்பில் இருந்தனர். இவர்களில் 3,086 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 689 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. 129 பேருக்கு தொற்று இல்லை. மற்றவர்களுக்கு பரிசோதனை முடிவு வரவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் 4,831 பேர் வெளி மாநிலத் தினர் உள்ளனர். இவர்களுக்கு இருப்பிடம், உணவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 70,259 வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 882 பேருக்கு சளி, காய்ச்சல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.