Last Updated : 16 Apr, 2020 05:20 PM

 

Published : 16 Apr 2020 05:20 PM
Last Updated : 16 Apr 2020 05:20 PM

கரோனா தொற்று முழுமையாக நின்றதும் திகார் சிறையில் குடும்பத்துடன் அழப்போகிறார் ப.சிதம்பரம்: ஹெச்.ராஜா

காரைக்குடி

‘‘கரோனா தொற்று முழுமையாக நின்றதும் திகார் சிறையில் குடும்பத்துடன் அழப்போகிறார் ப.சிதம்பரம்,’’ என பாஜக தேசிய செயாலளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கரோனா பாதிப்பு மூன்றாம் கட்டத்திற்கு செல்லவில்லை. இந்தியாவின் நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தடுத்த திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா பரவிய சில நாடுகளில் ராணுவத்தை பயன்படுத்தி அடக்குமுறையை கையாண்டு வருகின்றனர். அதுபோன்றநிலை இந்தியாவில் இல்லை.

மத்திய அரசு நம் நாட்டில் வாழும் 130 கோடி மக்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்கிறது. மத்திய , மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசும் ஸ்டாலின், ஏன் சன் குழும சேனல்களுக்கு மூன்று மாதங்களுக்கு மக்களிடம் சந்தா வாங்க மாட்டோம் என்று அறிவிக்கவில்லை. அவர் மத்திய, மாநில அரசுகள் மீது குறை கூறுவதை நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 90 சதவீதம் பேர் புதுடெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். கமல் முட்டாள் தனமான பதிவுகளை பதிவு செய்வதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

அரசுக்கு எதிராக தூண்டி விட்டு மக்களுக்கும் அரசுக்கும் இடையே மனக்கசப்பை உருவாகும் விதமாக பேசிவரும் ப.சிதம்பரம், ஸ்டாலினை வண்மையாக கண்டிக்கிறேன்.

மேலும் கரோனா தொற்று பரவல் முழுமையாக நின்றவுடன் ப.சிதம்பரம் தனது குடும்பத்துடன் திகார் சிறையில் அழப்போகிறார். ஸ்டாலின் ,சிதம்பரம் பொறுப்போடு பேசாவிட்டால், அவர்களுக்கு எதிராக மக்கள் மாறுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x