Published : 16 Apr 2020 03:50 PM
Last Updated : 16 Apr 2020 03:50 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனாவில் இருந்து 21 பேர் மீண்டனர்: ஒருவர் உயிரிழப்பு- ஆட்சியர் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்படைந்த மொத்தம் 65 பேரில் 21 பேர் குணமடைந்ததை அடுத்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்த்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த 15-ம் தேதி வரை 65 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டு இவர்கள் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் வெளிமாநிலப் பயணம் மேற்கொண்டவர்கள் 45 பேர், அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த 155 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் 12 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த 444 பேரில் 362 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

மொத்தம் 65 பேரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் 21 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது. இந்த பகுதிகளில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.

இப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவாசியப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் பாதுகாப்புடன் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டுவருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 308 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் தனியர் கல்லூரி, அரசு கல்லூரிகளில் படுக்கைவசதிகள் தயார்நிலையில் உள்ளது, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x