போன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை: இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை ஏற்பாடு

போன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை: இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை ஏற்பாடு
Updated on
1 min read

கரோனா அச்சத்தால் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பெரும்பாலானவை மூடிக் கிடக்கின்றன. இதனால், சாதாரணமான உடல் உபாதைகளுக்கும் இதய நோய் உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்கும் மருத்துவம் மற்றும் ஆலோசனைகளைப் பெற முடியாமல் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இப்படியான சிக்கலில் இருப்பவர்களுக்கு அலைபேசி வழியாக உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ளனர் இந்திய மருத்துவக் கழக மருத்துவர்கள்.

ஊரடங்கு சூழலில், மக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தபடியே மருத்துவ ஆலோசனைகளைப் பெறும் வகையில் இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளையைச் சேர்ந்த மருத்துவர்களால் இந்த மருத்துவ ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட இந்தக் குழுவில் அடங்கியுள்ள அனைவரின் அலைபேசி எண்களும் பொதுமக்களுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாகத் தரப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், அலைபேசி மூலம் தங்களுக்குத் தேவையான பிரிவுகளைச் சார்ந்த மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு உரிய மருத்துவ ஆலோசனைகளையும், தேவையான வழிகாட்டுதல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளையின் தலைவர் டாக்டர்.பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ ஆலோசனைக்குழு மருத்துவர்களை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ள மருத்துவர்களும் அவர்களது அலைபேசி எண்களும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநல மருத்துவர்கள்:

டாக்டர்.சிவக்குமார் 9443872888
டாக்டர்.வாசுகி 9385335248
டாக்டர்.ஜெயபிரகாஷ் 9443156554
டாக்டர்.சரத் 9884115737

அறுவை சிகிச்சை நிபுணர்கள்:
டாக்டர்.பாரதிதாசன் 9444232115
டாக்டர்.சங்கர்ராமன் 9442230368
டாக்டர்.குமரன் 9944775575

குழந்தைகள் நல மருத்துவர்கள்:
டாக்டர்.ஜெயக்குமார் 95975 13351
டாக்டர்.மஞ்சுகேஸ்வரி 9442537777

மகளிர் & மகப்பேறு மருத்துவர்:
டாக்டர்.மதுமிதா 9442933766

எலும்பு மூட்டு மருத்துவர்கள்:
டாக்டர்.முத்து 9842915060
டாக்டர்.நீலகிருஷ்ணன் 9842427872

நரம்பியல் மருத்துவர்கள்:
டாக்டர்.பிரபு 9442437777
டாக்டர்.மணிமாறன் 9894361857

தோல் மருத்துவர்கள்:
டாக்டர்.கவியரசன் 9443148889
டாக்டர்.விஜயகுமார் 9865767961

கண் மருத்துவர்:
டாக்டர்.கோவிந்தராஜுலு 9442901709

பல் மருத்துவர்:
டாக்டர்.இராஜசிம்மன் 9443873713

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in