Published : 16 Apr 2020 07:39 AM
Last Updated : 16 Apr 2020 07:39 AM

மளிகைக் கடைக்காரரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி டெல்லிக்கு சென்று வந்தவர் யார்?- போலீஸார் தீவிர விசாரணை

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வாளவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் செல்லதுரை(29). வீட்டிலேயே மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

இரு தினங்களுக்கு முன் இவரது வீட்டுக்கு வந்த வருவாய், சுகாதாரம் மற்றும் காவல் துறை அதிகாரிகள், டெல்லிக்கு சென்று விட்டு வந்தபின், ஏன் இன்னும் கரோனா வைரஸ் மருத்துவ பரி சோதனைக்கு நீங்கள் வரவில்லை என செல்லதுரையிடம் கேட்டுள் ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த செல்லதுரை, நான் டெல்லிக்கே செல்லவில்லை எனக் கூறி யுள்ளார். அதிகாரிகள் குறிப்பிட்ட நாளில் செல்லதுரை வீட்டில்தான் இருந்தார் என அவரது பெற்றோ ரும், அப்பகுதி மக்களும் தெரிவித் தனர். இதையடுத்து விமான நிறுவனத்திடமிருந்து பெற்ற பட்டியலை மீண்டும் சரிபார்த்த சுகாதாரத் துறையினர், அதில் பயணியின் முகவரி மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் செல்லதுரையினுடையதுதான், ஆனால், பெயர் மட்டும் சுபையர் அலி என இருப்பதாக தெரிவித் தனர்.

இதைத்தொடர்ந்து, இதில் ஏதோ குளறுபடி நடந்திருப்பதாக உணர்ந்த சுகாதாரத் துறை அதி காரிகள், சந்தேகத்தின்பேரில் செல்லதுரையை குண்டுக்கட்டாக தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி எதுவும் இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் இருந்து விடுவித்தனர்.

இதற்கிடையே, செல்லதுரையின் முகவரி மற்றும் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி விமானத் தில் டெல்லிக்கு சென்றுவிட்டு சென்னைக்கு வந்த நபர் எந்த ஊரைச் சேர்ந்தவர், அவரது பின்னணி என்ன? அவர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவரா என்பன குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

கரோனா பரிசோதனைக்கு சென்று வந்தது குறித்து பலரும் பேசுவதால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், தன் பெயர், முகவரி மற்றும் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி டெல்லி சென்று வந்தவர் குறித்து விசாரிக்குமாறும் செல்லதுரை, முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உரிய விசாரணை நடத்தப்படும் என முசிறி டிஎஸ்பி செந்தில்குமார் அவரிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x