

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள்உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேமுதிக சார்பில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும், தேமுதிக தலைமை அலுவலகமும் கரோனா சிகிச்சைக்காக ஏற்கெனவே தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள், மே 3-ம் தேதிக்குப் பிறகு வழங்கப்படும்.
ஊரடங்கு நீங்கிய பிறகு, ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி நிர்வாகிகள் வாயிலாக பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். உதவி பொருட்களை வழங்க தேமுதிகவினர் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.