

கரோனா வைரஸால் பாதிக்கப்பட் டுள்ளவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்காக, குணமடைந்தவர்களிடம் இருந்து ரத்தத்தை தானம் பெறும் முயற்சியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா வைரஸால் 1,200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலை யில், சிகிச்சைக்குப்பின் 81 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள் ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கூட்டுமருந்து சிகிச்சை அளிக்கப்படு கிறது.
இந்த சிகிச்சையில் மலேரியாமற்றும் மூட்டு வலி பிரச்சினை களுக்கு தீர்வு அளிக்கும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை இடம்பெறுகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் திடீரென்று கடுமை யான நுரையீரல் பாதிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.
உயிருக்கு ஆபத்தான நேரத்தில் செயற்கை சுவாசக் கருவியான வென்டிலேட்டரும் பயனளிக்காததால், சிகிச்சை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தை தானமாகப் பெற்று, அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்து எடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த சிகிச்சை முறை குறித்துமருத்துவ நிபுணர்கள் குழு முதல்வரிடம் பரிந்துரை செய்தனர். பிளாஸ்மா சிகிச்சை முறைக்கு அனுமதிக் கேட்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலிடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ரத்தத்தில் சிவப்பணுக்கள், தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளாஸ்மா என 4 கூறுகள் உள்ளன. இதில், பிளாஸ்மாவில் நோய்களை குணமாக்கும் எதிர்ப்பாற்றல் இருக்கும். கரோனா வைரஸ்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தை தானமாகப் பெற்று அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்து எடுத்து,வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக் கப்படும்.
இதன்மூலம், அவர்களும் விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது. இந்த பிளாஸ்மா சிகிச்சையை சென்னை அரசு பொது மருத்துவமனை உட்பட 4 மருத்துவ மனைகளில் அளிப்பதற்கு அனுமதிகேட்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலிடம் விண்ணப் பித்துள்ளோம்.
அனுமதி கிடைத்ததும், பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும். அதற்காக, கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த 18 வயது முதல் 50 வயதுள்ளவர்களிடம் ரத்த தானம் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது. அவர்களும் ரத்த தானம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.