Last Updated : 15 Apr, 2020 05:21 PM

 

Published : 15 Apr 2020 05:21 PM
Last Updated : 15 Apr 2020 05:21 PM

2 மாதத்திற்குள் மாறியது கரோனா சூழ்நிலை: தமிழர்களைத் தடுக்க கேரளாவில் நடவடிக்கை

கம்பம்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து யாரும் தேனி மாவட்டத்திற்குள் நுழைவதைத் தடுக்க பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் தமிழகப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நிலைமை அப்படியே மாறியுள்ளது.

முன்பு கேரளாவில் கரோனா தொற்று அதிகமாக ஏற்பட்டது. இதனால் தமிழகப் பகுதிகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தேனியில் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளதால் தற்போது கேரளா தனது எல்லைகளில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவில்தான் கரோனா தொற்று ஏற்பட்டது. சீனாவில் இருந்து திரும்பிய மாணவர்கள், இத்தாலி சுற்றுலா பயணிகள் போன்றவர்களினால் இந்நிலை ஏற்பட்டது.

பத்தினம்திட்டா, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வெகுவாய் பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு தொடர்விடுமுறை, திரையங்குகள் மூடல், மருத்துவப்பரிசோதனை, கண்காணிப்பு, தனிமைப்படுத்துதல் என்று பல்வேறு நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டன.

சுற்றுலாத்தளங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் தேக்கடி, மூணாறு உள்ளிட்ட பல பகுதிகள் வெறிச்சோடின. கேரளாவில் ஏற்பட்ட இத்தொற்று காரணமாக தமிழக எல்லையான தேனி மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் துவங்கின.

கம்பம்மெட்டு, லோயர்கேம்ப், போடிமெட்டு உள்ளிட்ட எல்லைப்பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதாரம், உள்ளாட்சி, காவல் உள்ளிட்ட துறைகள் இணைந்து கண்காணிப்பை மும்முரப்படுத்தியது.

கிருமிநாசினி தெளித்த பிறகே தமிழக பகுதிகளுக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. மேலும் வாகனத்தில் வருபவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

வனப்பகுதி வழியே யாரும் தமிழகப்பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறை அங்கு தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கேரளாவில் இத்தொற்று வெகுவாய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இடுக்கி கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. அதேவேளையில் தேனியில் கரோனா பாதிப்பு 40ஆக உயர்ந்துள்ளது.

இதனால் தற்போது தமிழகத்தில் இருந்து கேரளாவிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரள எல்லையில் உள்ள மலைகிராமங்களில் தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு, புதியவர்கள் யாரேனும் கேரளப்பகுதிக்குள் நுழைந்தால் தகவல் தெரிவிக்கவும் இடுக்கி ஆட்சியர் தினேசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து யாரும் தேனி மாவட்டத்திற்குள் நுழைவதைத் தடுக்க பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் தமிழகப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நிலைமை அப்படியே மாறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x