

ராமநாதபுரம் அருகேயுள்ள 1,200 ஏழை குடும்பங்களுக்கு ராமகிருஷ்ண மடம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி ஊராட்சியில் நாகாச்சி, வெள்ளமாசிவலசை, சேதுபதிநகர், தேவர் நகர், கட்டக்காரவலசை, கல்கிணற்றுவலசை உள்ளிட்ட 9 கிராமங்களில் உள்ள 1,200 ஏழைக் குடும்பங்களுக்கு ராமகிருஷ்ண மடம் சார்பில் ரூ. 10 லட்சம் மதிப்பில் அரிசி, மளிகைப் பொருட்கள் கரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
நிவாரண பொருட்களை ராமநாதபுரம் ராமகிருஷ்ண மட தலைவர் சுவாமி சுதபானந்தர், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகவுப் பெருமாளிடம் ஒப்படைத்தார்.
அதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நாகாச்சி ஊராட்சி தலைவர் ராணி கணேசன் ஆகியோர் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜீவ்காந்தி உள்ளிட்ட கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்: ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய பிடிஓ சேவுகப் பெருமாள், ராமகிருஷ்ண மடத் தலைவர் சுவாமி சுதபானந்தர்.