

கோவை அருகே போலீஸாருக்கு உணவு வழங்கிய முதியவர் ஒருவருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து போலீஸார் பீதியில் உள்ளனர்.
கோவை மாவட்டம் துடியலூரில் கோத்தாரி நகரில் வசிக்கும் 61 வயதானவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் வசிக்கும் பகுதியை சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தி, பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட இந்த நபர் டெல்லி சென்று மார்ச் 23ம் தேதி திரும்பியது தெரியவந்துள்ளது.
இவர் மேட்டுப்பாளையம் சாலையில் காவல் பணியில் இருந்த போலீஸாருக்கு உணவு வழங்கியது தெரியவந்தது. மேலும் துடியலூர் அரசு மருத்துவமனைக்கு இவர் அடிக்கடி சென்று வந்ததும் தெரியவந்துள்ளது.
தற்போது இவருடன் தொடர்பு இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.