

13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 59 வயது முதியவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்ததுடன், அவருக்கு ஜாமீனும் வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெண் இனத்தின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, பக்கத்து வீட் டில் வசிக்கும் மெய்யப்பன் (59) என்பவர் பலாத்காரம் செய்ததில் அந்தச் சிறுமி கர்ப்பமுற்றார். திடீரென அந்தச் சிறுமியின் வயிறு பெரிதானதால், தாயார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். மருத் துவப் பரிசோதனையில் சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
அவரிடம் விசாரித்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 59 வயது முதியவர், தாயார் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் ரூ.20 கொடுத்து தின்பண்டம் வாங்கிச் சாப்பிடுமாறும், யாரி டமும் இதை தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டியதாகவும், பலமுறை தன்னி டம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கொத்தமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர். பலாத் காரம் செய்த முதியவருக்கு திருமணமான மகளும், திருமணமாகாத 2 மகன்களும் உள்ளனர்.
காவலர்கள் தேடுவதை அறிந்து தலைமறைவான மெய்யப்பன் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளை யில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: 13 வயது சிறுமியை 59 வயது முதியவர் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது வெட் ககரமான சம்பவம். மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை. குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுக்கு குறையாமல் தண்டனை கிடைக்கும். இதுபோன்ற வழக்குகளில், முன்ஜாமீன் வழங்கக்கூடாது என நீதிமன்றம் கருதுகிறது. சமூகத்துக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது மட்டும் அல்ல; அந்த தண்டனையால், இது போன்ற குற்றங்களில் இனிமேல் யாரும் ஈடுபடக் கூடாது என்ற பயமும் ஏற் படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்கள், குறிப்பாக பாலியல் பலாத் காரச் சம்பவங்கள் பெண் இனத்தின் மாண்புக்கு தீராத களங்கத்தை ஏற்படுத் தும். பெண்களின் கண்ணியத்தை குழி தோண்டிப் புதைக்கும் செயலாகும்.
இந்த வழக்கின் தன்மை மற்றும் இதுபோன்ற வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, மனுதாரருக்கு முன் ஜாமீன் மட்டும் அல்ல, ஜாமீனும் வழங்கக் கூடாது.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய் யப்படுகிறது. இந்த வழக்கில் விரைவில் நீதி வழங்க வேண்டும். கீழ் நீதிமன்றம் விரைவில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண் டும். குற்றங்கள் நிரூபிக்கப்படும் நிலை யில், மனுதாரரின் வயதைக் கருத்தில் கொண்டும் விடுதலை செய்யக்கூடாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.