Published : 15 Apr 2020 07:24 AM
Last Updated : 15 Apr 2020 07:24 AM

தமிழ் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை; பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டதால் கோயில்கள் வெறிச்சோடின

தமிழ் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டன.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோயில்களில் பக்தர்களின் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள் ளது. அர்ச்சகர்கள் மட்டும் ஆகம விதிப்படி தினமும் பூஜை செய்து வருகின்றனர்.

ஆண்டு்தோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் தரிசனத்துக்கு அனுமதிக்காத காரணத்தால் பொதுமக்கள் கோயில் களுக்கு செல்லவில்லை.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அதிகாலை 4.30மணிக்கு பள்ளியறை திறக்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு பன்னீர்,தேன், பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து மலர்களால் சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர், அர்ச்சகர்கள் மூலம்சுவாமி முன்பு நேற்று மாலை பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வு கபாலீஸ்வரர்கோயில் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை பக்தர்கள் பக்திபரவசத்துடன் கண்டு ரசித்தனர்.

பாரிமுனை அருகே உள்ள கந்தகோட்டம் கோயிலில் நேற்று காலை 6.30 மணியளவில் கந்தசுவாமிக்கு சந்தனம், பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அரை மணி நேர இடைவெளிக்கு ஒருமுறை அர்ச்ச கர்கள் மூன்று கால பூஜைகளை செய்தனர். சுவாமிக்குபழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு நெய் தீப ஆராதனையும் காண்பிக்கப்பட்டது.

இதே போல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், குன்றத்தூர் முருகன் கோயில் உ்ட்பட நகரின் முக்கிய கோயில்களில் தமிழ் புத்தாண்டில் மக்கள் நலமுடன் இருக்க வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

முதல்வருக்கு ஆளுநர் வாழ்த்து

.தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சித்திரை தமிழ்ப் புத்தாண்டைமுன்னிட்டு முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார். அதில், ‘தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கும் இந்த சித்திரை முதல் நாளில் எனது வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த புத்தாண்டில் உங்கள்குடும்பம் அளவில்லா மகிழ்ச்சியைபெற வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ஆளுநருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதேபோல, துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநருக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x