

இந்தியாவில் போக்குவரத்துக்கு மட்டும் ஆண்டுதோறும் 200 கோடி லிட்டர் டீசல் தேவைப்படுகிறது என திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழக துணைவேந்தர் சு.நடராஜன் தெரிவித்தார்.
காந்திகிராமம் பல்கலைக்கழக கிராமிய எரிசக்தி மையமும், சென்னை மத்திய எண்ணெய் எரி வாயு சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து விவசாயி களுக்கு எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழா காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவை துணைவேந்தர் சு.நடராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது:
புதிய உத்திகள்
எரிசக்தி சேமிப்பு எவ்வளவு அவ சியமான ஒன்று என்பதை நாம் நன்கு அறிவோம். எரிசக்தி தேவை யின் அளவு நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் தேவையை மேலும் அதிகரிக்க புதிய உத்திகளைக் கையாள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் பட்டுள்ளோம்.
எரிசக்தி பயன்பாட்டை குறைப்பதன் மூலம் பணம் மட்டுமின்றி சுற்றுச்சூழலும் பாது காக்கப்படுகிறது. இந்தியாவில் நீர்ப்பாசனம், உழவு, அறுவடை மற்றும் விளைபொருள் போக்கு வரத்துக்கு மட்டும் 200 கோடி லிட்டர் டீசல் ஆண்டுதோறும் தேவைப்படுகின்றது. மேம்பட்ட நவீனத் தொழில்நுட்பப் பயன்பாட் டின் மூலம் விவசாயத்தில் 30-50 சதவீதம் வரை எரிபொருளை சேமிக்கலாம். இதற்கான தொடக்க முயற்சியே இந்தப்பரிந்துணர்வு ஒப்பந்தம் என்றார்.
மத்திய எண்ணெய் எரிவாயு சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறு வன சென்னை மண்டல இயக்கு நர் ஏ.ஜானகிராம் பேசியது:
சிறிய நீர்க்குழாய்களினால் ஏற் படும் விளைவுகள், டிராக்டர் பயன்பாட்டில் டீசல் சேமிப்பு, உயர் நீர்வெளியீட்டு மையத்திலிருந்து நீரைவெளியேற்றுவதால் ஏற்படும் விளைவுகள், முறையற்ற குழாய் இணைப்புகளால் ஏற்படும் இழப்புகள் குறித்த விழிப்புணர்வு படவிளக்கம், கலந்துரையாடல் மற்றும் குறும்படங்களின் வழியாக வழங்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் பி.பாலசுப்பிரமணியம், மத்திய எண்ணெய் எரிவாயு சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன சென்னை மண்டல உதவி எஸ்.பி.செல்வம். இயக்குநர் கிராமிய எரிசக்தி மைய இயக்கு நர் வி.கிருபாகரன் மற்றும் எம்.டெக் மாணவர்கள் கலந்துகொண் டனர்.
எரிசக்திக்கு மாற வேண்டும்
துணைவேந்தர் சு.நடராஜன் மேலும் பேசியது: நமது எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் கச்சா எண்ணெய்யின் பங்கு மிகவும் அதிகம். இன்னும் சில நூறு ஆண்டுகளில் எண்ணெய் வரத்து முற்றிலும் குறைந்துவிடும் என்று உலக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இயற்கை சார்ந்த சூரிய வெப்பம், காற்று, நீர், சாணம் போன்றவற்றில் உள்ள எரிசக்தி ஆற்றலைப் பயன்படுத்தினால்தான் வருங்கால எரிசக்தியின் தேவையை சமாளிக்க முடியும். எனவே மக்கள் மாற்று எரிசக்திக்கு மாறவேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தேவை வேளாண்மைத் துறையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றார்.
எரிசக்தி சேமிப்பு எவ்வளவு அவசியமான ஒன்று என்பதை நாம் நன்கு அறிவோம். எரிசக்தி தேவையின் அளவு நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் தேவையை மேலும் அதிகரிக்க புதிய உத்திகளைக் கையாள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.