அம்பேத்கரின் எண்ணங்களை பிரதிபலித்து தீண்டாமையை ஒழிப்போம்; ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

அம்பேத்கரின் எண்ணங்களை பிரதிபலித்து தீண்டாமையை ஒழிப்போம் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.14) வெளியிட்ட அறிக்கையில், "அம்பேத்கர் பிறந்த தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது. இந்திய அரசியல் சாசனத்தை எழுத நினைத்த போது முதலில் தோன்றிய பெயர் அம்பேத்கர். இவர் மிகச்சிறந்த சட்டமேதை மட்டுமல்ல பொருளாதாரம், அரசியல், தத்துவம், உலக வரலாறு ஆகியவற்றிலும் மாமேதை.

தீண்டாமை என்ற கொடிய நோய் ஒழிய பாடுபட்டவர். சாதியை ஒழித்து அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று நினைத்தவர். தாழ்த்தப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்தவர். அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளுக்கும், பாதுகாப்புக்கும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

தீண்டாமை மற்றும் சாதிப்பிரச்சினையை முற்றிலுமாக ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்காக பாடுபட்டவர். அவரை இப்போதைய அசாதரண சூழலில் பொதுமக்கள் அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால், அம்பேத்கர் எப்படி விழிப்புணர்வுடன் செயல்பட்டு அனைத்து தரப்பு மக்கள் நலன் காக்கப்பாடுபட்டாரோ அதேபோல இப்போதைய கரோனா காலத்தில் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு கரோனா என்ற கொடிய நோயை ஒழிக்க வேண்டும்.

அம்பேத்கர்: கோப்புப்படம்
அம்பேத்கர்: கோப்புப்படம்

எனவே, தீண்டாமை என்ற கொடிய நோய் ஒழிய பாடுபட்ட அம்பேத்கர் பிறந்த நாளான இன்று அவரை நினைத்து மரியாதை செய்து அவரது எண்ணங்களை பிரதிபலித்து தீண்டாமையை ஒழிப்போம், கரோனா என்ற கொடிய நோயில் இருந்து விடுபட மத்திய, மாநில அரசுகளின் கோட்பாடுகளை கடைபிடித்து கரோனாவை ஒழிப்போம்.

சமூக சீர்திருத்தவாதி அம்பேத்கர் ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள் உள்ளிட்ட சில பொன்மொழிகளை முன்வைத்தார். எனவே, கரோனா என்ற கொடிய நோயை ஒழிப்பது ஒன்றே இப்போதைக்கு நமக்குள்ள லட்சியம், அதை அடைவதற்கு மத்திய, மாநில அரசுகளின் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுப்போம், கரோனாவை ஒழிப்போம்" என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in