கரோனா பாதிப்பால் குமரி கோயில்களில் சித்திரை கனி காணும் வைபவம் ரத்து

கரோனா பாதிப்பால் குமரி கோயில்களில் சித்திரை கனி காணும் வைபவம் ரத்து
Updated on
1 min read

குமரி கோயில்களில் கரோனா பாதிப்பை தொடர்ந்து இன்று சித்திரை கனி காணும் வைபவங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் கேரள பாரம்பரிய முறைப்படி சித்திரை கனி காணும் நிகழ்வு சித்திரை முதல் நாளில் நடைபெறுவது வழக்கம்.

கோயில் சன்னதி முன்பு அதிகாலையிலே விதவிதமான காய்கனிகளால் அலங்காரம் செய்து பூஜை செய்யப்படும். இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்வர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக காய்கனிகள் வழங்கப்படும்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில் உட்பட கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இந்த சித்திரை கனிகாணும் வைபவங்கள் முக்கிய நிகழ்வாக நடத்தப்படும்.

மறுநாளும் கேரளாவில் உள்ள கோயில்களை போன்றே சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் கனிகாணுதல் நடைபெறும். இந்த ஆண்டு கரோனா பாதிப்பால் கோயில்கள் அடைக்கப்பட்டுள்ளன.

வீடுகளிலே மக்கள் தனித்திருப்பதால் இன்று நடைபெற இருந்த இந்த ஆண்டிற்கான சித்திரை கனிகாணுதலை ரத்து செய்வதென இந்து அறநிலையத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதைப்போலவே மாவட்டம் முழுவதும் உள்ள நகர, கிராமப்புற கோயில்களிலும் சித்திரை கனி காணும் வைபவம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகமமுறைப்படி சன்னதியில் பூஜைகள் மட்டும் நடைபெறவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in