Published : 13 Apr 2020 03:24 PM
Last Updated : 13 Apr 2020 03:24 PM

மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க இயந்திரத்தைக் கண்டுபிடித்த மதுரை பொறியாளர்: ஆட்சியர் அலுவலகத்தில் பயன்பாட்டிற்கு வந்தது 

மதுரை

மதுரையில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க உதவும் இயந்திரத்தை கண்டுபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கி உள்ளார் பொறியாளர் ஒருவர்.

அவரது இயந்திரம் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயன்பாட்டில் உள்ளது. அதுபோல், ரேஷன் கடை, உழவர் சந்தை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் பொன்குமார்.

இவர், பள்ளிக் குழந்தைகள் மத்தியில் மரம் வளர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இவர் மற்றும் இவரது பசுமை நண்பர்கள் குழுவினர் ஆயிரத்திற்கும் மரக்கன்றுகளை விலைக்கு வாங்கி பொதுமக்கள், பள்ளி குழந்தைகளுக்கு வீடுகளில் கொண்டு போய் நடுவதற்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு கல்விக்கு உதவுவது, அவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது, அரசுப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டிக் கொடுப்பது போன்ற கல்வி மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த சமூகப் பணிகளில் இவர் தனனை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தற்போது ‘கரோனா’ காலத்திலும் இவரது சமூக பங்களிப்பு சத்தமில்லாமல் நடக்கிறது.

இந்நிலையில் ரேஷன் கடைகள், காய்கறிக் கடைகள், அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க உதவும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த பொறியாளர் பொன்குமார் அதனை மாவட்ட ஆட்சிரிடம் வழங்கினார்.

இந்த இயந்திரம் வழியாக 1 மீட்டர் இடைவெளியில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து செல்லலாம். ஒருவர் 1 மீட்டர் இடைவெளியில் முன்னாடி நகர்ந்து சென்றப்பிறகே மற்றவர்கள் அவர்கள் பின்புறம் நகர்ந்து வர முடியும்.

இந்த இயந்திரத்தால் மக்கள் யாரும் வரிசையில் நெருங்கி நிற்க முடியாது. தற்போது பொன்குமார் கண்டுபிடித்த இந்த இயந்திரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

அதுபோல், உழவர் சந்தை, ரேஷன் கடைகள் உள்ளிட்டவற்றில் இந்த இயரத்தை வைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவரது விரும்பம்.

மாவட்ட நிர்வாகம் உதவி செய்தால் அதை இலவசமாக நாங்கள் தயார் செய்து வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பொன்குமார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x