Last Updated : 12 Apr, 2020 06:37 PM

 

Published : 12 Apr 2020 06:37 PM
Last Updated : 12 Apr 2020 06:37 PM

வீடில்லாத ஆதரவற்ற தெருவோர மக்களுக்கு பிரான்ஸ் வாழ் புதுச்சேரி தமிழர்கள் உணவு வழங்கல்

படவிளக்கம்: வீடில்லாத ஆதரவற்ற தெருவோர மக்களுக்கு பிரான்ஸ் வாழ் புதுச்சேரி தமிழர்கள் உணவு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அருண் தொடங்கி வைத்தார்

புதுச்சேரி

வீடில்லாத ஆதரவற்ற தெருவோர மக்களுக்கு பிரான்ஸ் வாழ் புதுச்சேரி தமிழர்கள் உணவு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அருண் தொடங்கி வைத்தார்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து புதுச்சேரி அரசு மாவட்ட ஆட்சியரகத்தின் மூலம், புதுச்சேரியிலுள்ள 2,Image

200 வீடில்லாத ஆதரவற்ற தெருவோர மக்களுக்கு தினமும் மூன்று வேளையும் மாநில பேரிடர் நிதியை கொண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் உணவு வழங்கி வருகிறது.

நகரப்பகுதிகளில் உணவு வழங்க நகர பகுதியிலேயும், கிராமப்பகுதிகளில் உணவு வழங்க கிராம பகுதியிலேயும் உணவு தயாரிக்கப்படுகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் உணவு மாவட்ட ஆட்சியரகம் தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தினமும் ரூ.1 லட்சம் ரூபாய் அரசு செலவிடுகிறது.

இந்நிலையில் பிரான்சில் வசிக்கும் புதுச்சேரி தமிழர்கள் இரண்டு நாட்களுக்கு புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி மக்களுக்கும் உதவ எண்ணி மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு, உணவுக்கான செலவை தாங்களே ஏற்பதாக தெரிவித்தனர்.

அதன்படி வீடில்லா ஆதரவற்ற தெருவோர மக்களுக்கு மூன்று வேலை உணவினை பிரான்ஸ் தமிழர்கள் வழங்கும் பணியை
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் நகர பகுதியில் உணவு தயாரிக்கும் இடமான வள்ளலார் சபையில் இன்று(ஏப் 12) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் சிறப்பு அதிகாரி மோகன்குமார், பிரான்ஸ் வாழ் புதுச்சேரி தமிழர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சிவவிழியன், டாக்டர் சத்யா ஆனந்தம், மோகன் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளரும், துணை வட்டாட்சியர்மான செந்தில்குமார் மற்றும் வள்ளலார் சபை நிர்வாகிகள் சமூக இடைவெளி விட்டு இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் வாழ் தமிழர்கள் வீடில்லா ஆதரவற்றோருக்கு உணவினை வழங்கினர்.
.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x