தூத்துக்குடியில் கரோனாவுக்கு பலியான மூதாட்டி உடல் உறவினர்கள் இன்றி அடக்கம்

தூத்துக்குடியில் கரோனாவுக்கு பலியான மூதாட்டி உடல் உறவினர்கள் இன்றி அடக்கம்
Updated on
1 min read

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி உயிரிழந்தார். இந்த மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு இதுவாகும்.

மூதாட்டியின் உடலை உடனடியாக அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர். ஏஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான போலீஸார், மூதாட்டியின் உடலை பாலிதீன் உறையில் சுற்றி, சிறப்பு வாகனம் மூலம் சிதம்பர நகர் மையவாடிக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு, தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார குழுவினர், மூதாட்டியின் உடலை 15 அடி ஆழத்தில் வைத்து புதைத்தனர். குழியில் ஒவ்வொரு 2 அடிக்கும் கிருமிநாசினி தூவினர். இந்நிகழ்வில் மூதாட்டி யின் உறவினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in