மதுவில் இருந்து விடுபட இதுவே சரியான தருணம்- மனநல மருத்துவர் யோசனை

எஸ்.சிவசைலம்
எஸ்.சிவசைலம்
Updated on
1 min read

சு.கோமதிவிநாயகம்

தூத்துக்குடியைச் சேர்ந்த மனநல மருத்துவர் எஸ்.சிவசைலம் கூறியதாவது: மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மது குடிப்பவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் குறைந்தளவு குடிப்பவர்கள்தான். இவர் களுக்கு இந்த ஒரு வாரத்தில் கை, கால் நடுக்கம், பசியின்மை, தூக்கமின்மை, தலைவலி ஏற்படலாம். வீட்டிலேயே இருப்பதால் குடும்பத்தினரின் அரவணைப் பால் குடியை மறந்து விடுவர். நடைப்பயிற்சி, நண்பர்களுடன் பேசுவது மது பழக்கத்தில் இருந்து விடுபட உதவும். ஊரடங்கு 13 நாள் கடந்துவிட்ட நிலையில், உடலில் ஆல்கஹால் குறைந்து மது குடிப்பவர்கள் நிலை பழைய நிலைக்கு திரும்பியிருக்கும். உறுப்புகள் தானே மறுசீரமைத்துக் கொண்டிருக்கும். இதைப் பயன்படுத்தி அவர்களை குடிப் பழக்கத்தில் இருந்து மீட்க குடும்பத்தினர் முயற்சிக்க வேண்டும். தியானம் செய்யலாம். 30 சதவீதம் பேர் அதிகம் குடிப் பவர்கள். அவர்களுக்கு வலிப்பு, மனக்குழப்பம் ஏற்படும் என்பதால் மருத்துவச் சிகிச்சை அவசியம்.

வலைத்தளத் தகவல்களை நம்ப வேண்டாம். கரோனா பாதிப்பில் இருந்து 70 முதல் 80 சதவீதம் பேர் குணமடைந்து விடு வதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in