Published : 12 Apr 2020 07:31 AM
Last Updated : 12 Apr 2020 07:31 AM

கரோனாவை கட்டுப்படுத்த 12 சிறப்பு பணிக்குழுக்கள்

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பரிசோதனைகளை அதிகரிக்கவும் 38 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட 12 மண்டலசிறப்பு பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேசிய அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களை 12மண்டலங்களாக பிரித்து, மண்டலத்துக்கு ஒரு ஐஏஎஸ் , 1 ஐபிஎஸ் அதிகாரி என 24 அதிகாரிகளை கொண்ட சிறப்பு பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், சென்னை மண்டலத்துக்கு சிறு குறு தொழில்கள் துறை செயலர் ராஜேந்திரகுமார், பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல்டிஜிபி ஆபாஷ்குமார் ஆகியோரும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை கொண்ட மண்டலத்துக்கு தொல்லியல் துறை ஆணையர் டி.உதயச்சந்திரன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி டி.எஸ்.அன்பு ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்துக்கு வரலாற்று ஆவண காப்பக ஆணையர் மங்கத்ராம் சர்மா, ரயில்வே ஐஜி வி.வனிதா, விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்துக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையசெயலர் எல்.சுப்பிரமணியன், கடலோர பாதுகாப்பு குழும கூடுதல்டிஜிபி கே.வன்னியபெருமாள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் மண்டலத்துக்கு டாஸ்மாக் மேலாண் இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக கூடுதல் டிஜிபி எம்.என்.மஞ்சுநாதா, ஈரோட்டுக்கு கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் டி.என்.வெங்கடேஷ், சிசிஐடபிள்யூ எஸ்பி எஸ்.லட்சுமி, திருப்பூர் மற்றும் கோவை அடங்கிய மண்டலத்துக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் குமார் ஜெயந்த் மற்றும் ஆயுதப்படை கூடுதல் டிஜிபி சங்கர் ஜூவால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை அடங்கிய மண்டலத்துக்கு நிதித்துறை சிறப்பு செயலர் ஆர்.ஆனந்தகுமார், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை கூடுதல் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ், தஞ்சை, திருவாரூர், நாகை அடங்கிய மண்டலத்துக்கு அருங்காட்சியகங்கள் ஆணையர் எம்.எஸ்.சண்முகம், பயிற்சிப்பிரிவு ஐஜி எம்.சி.சாரங்கன், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனிமாவட்டங்கள் அடங்கிய மண்டலத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் இயக்குநர் சி.காமராஜ், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி எஸ்.முருகன், கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்துக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் சி.முனியநாதன், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபெய் குமார் சிங், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்துக்கு கைத்தறித் துறை இயக்குநர் எம்.கருணாகரன், காவல் இயக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர், கரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்புடையவர்களை தினசரி கண்டறிய வேண்டும். அவர்களிடம் இருந்து மாதிரிகளை பெற்று விரைவாக முடிவுகளை வெளியிடுதல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அறிகுறி உடையவர்களை பரிசோதித்தல், தடைப்படுத்தப்பட்ட பகுதியில் அறிகுறியுடையவர்களை கண்டறிந்து பரிசோதித்தல், இந்த பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதை கண்காணித்தல், மருந்துகள், முகக்கவசம் உள்ளிட்டவை போதிய அளவில் இருப்பதையும், அவைமுறையாக பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளும் வழங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x