திருநங்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய புதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம்

திருநங்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய புதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம்
Updated on
1 min read

ஊரடங்கால் சிரமத்தில் இருக்கும் ஏழைகளின் துயர் துடைக்க சேவையுள்ளம் படைத்தவர்கள் பலரும் தங்களால் இயன்றதை செய்து மனிதம் போற்றி வருகிறார்கள். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்றவர்களை விட ரஜினி மக்கள் மன்றத்தினர் ஒருபடி முன்னே நிற்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் ஒருமுறை உணவு வழங்கி முடித்துவிட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவர்களுக்கு ஐந்து கிலோ அரிசியுடன் ஏழு வகையான காய்கறிகள் மற்றும் முகக் கவசம் கொண்ட பையை ரஜினி ரசிகர்கள் வழங்கி வருகிறார்கள்.

ஊரடங்கால் தாங்கள் அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாமல் தவித்து வருகிறோம் என்று புதுக்கோட்டையில் வசிக்கும் திருநங்கைகள் நேற்று வாட்ஸ் - அப்பில் பதிவிட்டனர். இந்தத் தகவல் ரஜினி மன்ற மாவட்ட அமைப்பாளர் கே.கே.முருகுபாண்டியனுக்குத் தெரியவர உடனே களமிறங்கினார்.

ஐந்து கிலோ அரிசி மற்றும் காய்கறிகள், முகக் கவசம் அடங்கிய பைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் இருக்குமிடம் தேடித் சென்று அங்கிருந்த 170 திருநங்கைகளுக்கும் வழங்கினார் முருகுபாண்டியன். மேலும், எப்போது உணவு தேவைப்பட்டாலும் தயங்காமல் தன்னை அணுகுமாறு அவர்களிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

இதனிடையே, இன்று கந்தர்வகோட்டை மற்றும் விராலிமலை ஒன்றியங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு அரிசி, மற்றும் காய்கறிகள் அடங்கிய இரண்டாயிரம் பைகளை ரஜினி மன்றத்தினர் வழங்கி இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in