

திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் டேங்கர் லாரி இன்று வந்தது.
இம்மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 56 பேர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், தென்காசி மாவட்டத்தைs சேர்ந்த 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேவைப்பட்டால் வென்டிலேட்டர்கள் மூலம் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செலுத்தவும் மருத்துவமனையில் கரோனா வார்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போதுமான அளவுக்கு இருப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் ஆக்ஸிஜன் கூடுதலாத தேவைப்பட்டால் அதை இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பெரிய டேங்கர் ஒன்றில் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு சென்னையிலிருந்து லாரியில் திருநெல்வேலிக்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் இவ்வாறு பெரிய டேங்கரில் ஆக்ஸிஜன் இருப்பில் வைக்கப்பட்டிருக்கும். திருநெல்வேலிக்கு கூடுதலாக ஆக்ஸிஜன் டேங்கர் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.