வண்டலூர் பேருந்து நிலைய திட்டம் தாமதம்: தமிழக அமைச்சர் கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை - திமுக தலைவர் கருணாநிதி கருத்து

வண்டலூர் பேருந்து நிலைய திட்டம் தாமதம்: தமிழக அமைச்சர் கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை - திமுக தலைவர் கருணாநிதி கருத்து
Updated on
1 min read

வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் தாமதமாவதற்கு மத்திய அரசின் நில எடுப்புச் சட்டம்தான் கார ணம் என அமைச்சர் கூறுவது ஏற்பு டையதல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள் ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் பல அறிக்கைகளை படிக்கிறார். கோயம்பேட்டில் நிலவும் நெரிசலை தவிர்க்க வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று 110-வது விதியின்கீழ் 2013-ம் ஆண்டு முதல்வர் அறிவித்தார். அதன் நிலை என்னவென்று நான் கேட்டதற்கு, 2 ஆண்டுகள் கழித்து துறையின் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது பேரவையில் பதிலளித்துள்ளார்.

அந்த பதிலை ஒரு ஆங்கில நாளிதழ் மட்டுமே வெளியிட்டுள்ளது. அமைச்சர் தனது பதிலில், ‘வண்டலூர் புதிய பேருந்து நிலையத்துக்கான இடங்களை பெற நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக காத்திருப்பதால்தான் வண்டலூர் பேருந்து நிலையப் பணிகள் தொடங்க தாமதம் ஆகிறது’ என்று கூறியதாக செய்தி வெளியாகி யுள்ளது. வண்டலூர் பேருந்து நிலைய அறிவிப்பு வெளியானது 2013-ம் ஆண்டு. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் தாமத மானது 2014-15ம் ஆண்டில். அப்படி இருக்கையில், அமைச்சர் கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை.

திருமழிசை மற்றும் மதுரையில் துணைக்கோள் நகரம் அமைக் கப்படும் என்று 2011 மற்றும் 2013-ம் ஆண்டு முதல்வர் அறிவித்தார். அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அப்போது வெளியான அறிவிப்புகளுக்கான பணிகளே தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளன என்றால், தற்போதைய அறிவிப்புகள் எப்போது செயல்படுத்தப்படும்?

அம்மா முழு உடல் பரி சோதனை திட்டம் என்ற அறி விப்பை பேரவையில் கடந்த 25-ம் தேதி முதல்வர் அறிவித்தார். அந்த திட்டம் புதியதல்ல. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் இதயம் மற்றும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளும் அந்த திட்டத்தை திமுக தனது ஆட்சிக் காலத்தில் 1999-ம் ஆண்டே அறிவித்தது. இவ்வாறு அறிக்கை யில் கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in