

மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதல்வர் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மதுரை மாவட்ட கிராமங்கள்தோறும் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் கல்யாணகுமார், மாவட்ட எஸ்பி மணிவண்ணன் ஆகியோரிடம் தினமும் கேட்டறிந்து ஆலோசனை வழங்குகிறேன்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கரோனா தடுப்பில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். சென்னையில் இருந்தாலும் கட்சியினருக்கு வழங்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.