

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக சேகரிக்க, தனி வாகனத்தை ஆட்சியர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 308 வீடுகளில் இருப்பவர்களின் வீடுகளுக்கே சென்று ரத்தமாதிரிகளை சேகரித்து, வாலாஜா அரசுமருத்துவமனையில் ஒப்படைக்கசிறப்பு வசதிகள் கொண்ட வாகனம்தயார் செய்யப்பட்டது. தனியார் நிறுவனம் நன்கொடையாக வழங்கிய இந்த வாகனத்தின் செயல்பாட்டை, ஆட்சியர் திவ்யதர்ஷினி நேற்று தொடங்கி வைத்தார். இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27 பேரில், 26 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபரான 25 வயது இளைஞர்,வாலாஜா அரசு மருத்துவமனை கண்காணிப்பில் நடத்தப்பட்ட பரிசோதனை களில் குணமடைந்தது உறுதி செய்யப் பட்டதால், நேற்று வீடு திரும்பினார்.
அமிர்தி பூங்காவில் ஆய்வு
வேலூர், அமிர்தி சிறு வன உயிரியல் பூங்காவில் கால்நடை மருத்துவர் வரதராஜன், வனச்சரகர் சரவணன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வில் விலங்குகள், பறவைகள்நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து பெட்டகம்
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை எஸ்ஆர்டிபிஎஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் கே.சி வீரமணி கலந்துகொண்டு,மாற்று் திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் தயாரிப்பு பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து மிக்க சிறப்பு பெட்டகத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் எஸ்பி விஜயகுமார், மறுவாழ்வு இல்லத்தின் இயக்குநர் தமிழரசி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மழையால் நெல் மூட்டைகள் சேதம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில்உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் செய்யாறு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நேற்று முன்தினம் பெய்த மழையில் நனைந்தன.
மேலும் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், கீரப்பாக்கம் நெல்கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட 50 ஆயிரத்துக்கும் அதிக மான நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ளகொள்முதல் மையங்களில் சாக்கு பற்றாக்குறையால் குவித்து வைக்கப் பட்டிருந்த நூறு டன் நெல் குவியல்கள் மழையில் நனைந்து சேதமாயின.