

ரேபிட் கருவிகள் மூலம் கரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
கரோனா வைரஸுக்கு விரைவாக பரிசோதனை செய்ய 4 லட்சம் ரேபிட் பரிசோதனைக் கருவிகள் வாங்க தமிழக அரசு முடிவுசெய்தது. அதன்படி முதல்கட்டமாக 50 ஆயிரம்ரேபிட் பரிசோதனைக் கருவிகள் சீனாவில்இருந்து சென்னைக்கு விரைவில் வரஉள்ளன.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ரேபிட் கருவியின் மூலம்காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்றஅறிகுறிகள் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும்.
இந்த கருவி மூலம் செய்யப்படும் பரிசோதனையின் முடிவுகள் 30 நிமிடங்களில் தெரிந்துவிடும். மருத்துவமனையில் அனுமதிக்காமல் பரிசோதனை செய்யலாம்” என்றனர்.