தென்மேற்கு பருவ மழை ஜூன் 5 தொடங்கும்

தென்மேற்கு பருவ மழை ஜூன் 5 தொடங்கும்
Updated on
1 min read

இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவ மழை ஜூன் 5-ம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு அதிக மழை கிடைக்கும் காலம் வட கிழக்கு பருவ மழைக் காலம்தான் என்றாலும், தென் மேற்கு பருவ மழையின்போது இந்தியாவின் மற்ற பகுதிகளை விட தமிழகத்தில் அதிக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் எஸ்.பி.தம்பி கூறியதாவது:

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரை தென் மேற்கு பருவ மழைக் காலம். ஜூன் மாத தொடக்கத்தில் இந்தியாவின் தென் மேற்கு முனையில் (கேரள மாநிலத்திலிருந்து) பருவ மழை தொடங்கும். அங்கிருந்து, நாட்டின் உட்பகுதிகளுக்கு நகர்ந்து, ஜூலை மாத இரண்டாம் வாரத்தில், நாட்டின் பிற பகுதிகளில் மழை பெய்யும்.

இந்த பருவ மழை காலத்தின்போது தமிழ்நாட்டின் தென்மேற்கு பகுதிகளுக்கு அதிக மழை கிடைக்கும். இந்த ஆண்டும் அதேபோல கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in