Published : 10 Apr 2020 06:48 PM
Last Updated : 10 Apr 2020 06:48 PM

தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை: வங்கிக் கணக்கைப் பதிவு செய்ய சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகையை வழங்க தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை உடனடியாக மாநகராட்சியிடம் வழங்குமாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் 27,195 பேர் உள்ளனர். எனவே, இதுவரை வங்கிக் கணக்கு விவரங்களை வழங்காத பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வங்கியின் பெயர் மற்றும் கிளை முகவரி, சேமிப்புக் கணக்கு எண், கிளை குறியீட்டு எண், IFSC குறியீட்டு எண் (Scanned copy) மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை எண் (Scanned copy), வியாபாரியின் கைபேசி எண் ஆகியவற்றிற்கான நகல்களை (Xerox Copies) உடனடியாக கீழ்க்காணும் ஏதேனும் ஒரு வழிமுறையில் தகவல்களை வழங்கும்பட்சத்தில் நிவாரணத் தொகை உடனடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

1) சம்பந்தப்பட்ட மண்டல நகர விற்பனைக் குழு, மண்டல அலுவலகம் (அல்லது)

2) arohqprop1@gmail.com இமெயில் முகவரி மூலமாக (அல்லது)

3) கைபேசி எண் 94999 32899 வாட்ஸ் அப் மூலமாக (Mobile Whatsapp) (அல்லது)

4) www.chennaicorporation.gov.in இணையதள முகவரி மூலமாக தகவல்களை அனுப்பலாம்.

மேலும், சம்பந்தப்பட்ட மண்டல நகர விற்பனைக்குழு அலுவலகத்தில் விவரங்களை வழங்க மண்டல அலுவலகத்திற்கு வரும்போது கரோனா வைரஸ் நோய்த் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x