

தெற்கு ரயில்வே நேற்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:
மருந்துகள், மருத்துவ உபகர ணங்கள் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களை கொண்டு செல்ல பார்சல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி, பல்வேறு வழித்தடங்களில் பார்சல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், மும்பை சிஎஸ்டி யில் இருந்து சென்னை சென்ட் ரலுக்கு 8-ம் தேதி தொடங்கி, வரும் 14-ம் தேதி வரை பார்சல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மும்பை சிஎஸ்டியில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் மாலை 6.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். 10-ம் தேதி (இன்று) முதல் 14-ம் தேதி வரை இதே சிறப்பு ரயில் மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு மும்பை சிஎஸ்டி சென்றடையும். கல்யாண், புனே, சோலாப்பூர், வாடி, குண்டக்கல், ரேணிகுண்டா ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று வரும். இதில் பொருட் களை கொண்டு செல்ல முன் பதிவு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களின் சரக்கு பிரிவு அலு வலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.