வாட்ஸ்அப் குழு உருவாக்கி வாடிக்கையாளர் வீடு தேடிச் சென்று இறைச்சி விற்பனை செய்ய உத்தரவு

வாட்ஸ்அப் குழு உருவாக்கி வாடிக்கையாளர் வீடு தேடிச் சென்று இறைச்சி விற்பனை செய்ய உத்தரவு
Updated on
1 min read

வாட்ஸ் அப் குழு உருவாக்கி, அதன் வழியாக ஆர்டர் பெற்று, வாடிக்கையாளர்களின் வீடு தேடிச் சென்று இறைச்சி விற்பனை செய்ய வேண்டும் என கிருஷ்ணகியில் இறைச்சிக் கடைக்காரர்களை, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் இளங்கோவன், நகராட்சி ஆணையாளர் சந்திரா மற்றும் அதிகாரிகள், இறைச்சி விற்பனை தொடர்பாக இறைச்சிக்கடைக்காரர்களுடன் ஆலோசனை செய்தனர்.

இதில், இறைச்சிக் கடைகளில் பொதுமக்களுக்கு நேரடியாக இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது. இறைச்சிக் கடைக்காரர்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி அதில் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும். அதில் ஆர்டர் செய்யும் பொதுமக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே இறைச்சியை கொண்டு சென்று கொடுத்துவிட்டு, சேவைக் கட்டணத்துடன் இறைச்சிக்கான பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

எக்காரணம் கொண்டும் கடைகளில் இறைச்சி விற்கக்கூடாது. இந்த உத்தரவை மீறி விற்பனை செய்தால் அந்த இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும், என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in