

டெல்லி பட்டேல் நகரைச் சேர்ந்த நிதின்ஷர்மா(30) என்ற இளைஞர், கடந்த ஏப்.6-ம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனும திக்கப்பட்டார்.
பரிசோதனை ஆய்வு முடிவில் அவருக்கு கரோனா தொற்று இல்லை எனக் கூறி கடந்த 7-ம் தேதி இரவு மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர், நள்ளிரவில் வந்த பரிசோ தனை அறிக்கையில், டெல்லி இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை மருத்துவமனைக்கு உடனே அழைத்து வருமாறும் போலீஸாரை சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டது.
ஆனால், மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிதின் ஷர்மா எங்கே சென்றார் எனத் தெரியவில்லை. அவர் எங்கு உள்ளார் என்பதைக் கண்டறிய, 7 தனிப்படைகளை அமைத்து போலீ ஸார் தேடி வருகின்றனர்.
மேலும் புதுச்சேரி, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாரும் அவரைத் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 சோதனைச் சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.