Published : 10 Apr 2020 08:00 AM
Last Updated : 10 Apr 2020 08:00 AM

நடமாடும் மளிகை, காய்கறி அங்காடி சேவை தொடக்கம்: ரூ.850-க்கு அரிசி, மளிகை பொருள் தொகுப்பு - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி விற்பனை அங்காடியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ். உடன் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா படம்: பு.க.பிரவீன்

சென்னை

சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்காடி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு சிரமமின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து நடமாடும்மளிகை, காய்கறி அங்காடி சேவை தொடங்க திட்டமிடப் பட்டிருந்தது.

அதன்படி, கே.கே.நகர், பி.டி.ராஜன் சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நடமாடும் மளிகை, காய்கறி விற்பனை அங்காடி சேவையை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்நேற்று தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் கூறியதாவது:

மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் அனுமதி பெற்ற தள்ளுவண்டி, சிறு வாகனங்கள் மூலம்பொதுமக்களின் குடியிருப்புபகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 80 நடமாடும்அங்காடிகள் கோடம்பாக்கம்மண்டலத்திலும், பிற மண்டலங்களில் 450 நடமாடும் அங்காடிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன.தேவைக்கு ஏற்ப அங்காடி கள் மேலும் அதிகரிக்கப்படும்.

இந்த நடமாடும் மளிகை கடையில் 4 நபர்கள் கொண்ட குடும்பங்களுக்கு 15 நாட்களுக்கு தேவைப்படும் அரிசி, பருப்பு,எண்ணெய், மிளகாய், உப்பு மற்றும் இதர மளிகைப் பொருட் கள் அடங்கிய தொகுப்பு ரூ.850-க்கு கிடைக்கும் இதுபோன்ற மளிகை, காய்கறி அங்காடிகள் நடத்த எத்தனை பேர் அனு மதி கோரினாலும், அவர்களுக்கு அனுமதி அளிக்க மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x