கரோனா ஊரடங்கால் குன்றக்குடியில் 6 பேர் மட்டுமே பங்கேற்ற திருமணம்: போலீஸாருடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய மணமக்கள்

காரைக்குடி பெரியர் சிலை அருகே காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து மணமக்கள் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காரைக்குடி பெரியர் சிலை அருகே காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து மணமக்கள் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் நடந்த திருமணத்தில் மணமக்கள் உட்பட 6 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

காரைக்குடியைச் சேர்ந்தவர்கள் முருகேசன், நித்யா. இருவருக்கும் திருமணம் செய்ய மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதற்கு அரசு தடை விதித்தது.

இதையடுத்து இன்று குன்றக்குடி சண்முகநாதன் கோயில் வாயிலில் முருகேசன், நித்யாவுக்கு எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இதில் மணமக்கள் உட்பட 6 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

தொடர்ந்து மணமக்கள் காரைக்குடி பெரியர் சிலை அருகே காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து சாலையில் செல்லும் நபர்களிடம் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அவர்கள் விழிப்புணர்வு வாசக பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

காரைக்குடி அருகே குன்றக்குடியில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in