

திண்டுக்கல் அருகே மாரம்பாடியில் தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும்வகையில் அவர்களின் பாதங்களை கழுவி, சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகேயுள்ள மாரம்பாடி ஊராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றதலைவர் ரொசாரியா தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் தனுஷ்கோடி முன்னிலை வகித்தார். மாரம்பாடி பங்குத்தந்தை அமலதாஸ் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் மாரம்பாடி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைபணியாளர்களுக்கு பாதபூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களை சால்வை அணிவித்தும் தலைப்பாகை கட்டியும் கவுரவிக்கப்பட்டனர்.
இந்தநிகழ்வில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தூய்மைப் பணியாளர்களை கவுரவித்த நிகழ்வு கிராமமக்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றது.
ஆண்டுதோறும் கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள பாடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு உண்மையான கவுரம் அளிக்கப்பட்டுள்ளதாக கிராமக்கள் தெரிவித்தனர்.